தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு மையங்கள் திறப்பு

 ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு மையங்கள் திறப்பு

 ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு மையங்கள் திறப்பு


ADDED : ஜன 22, 2026 06:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 22, 2026 06:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு மையத்தை மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் சுகபுத்ரா திறந்து வைத்து ஓட்டுப்பதிவு இயந்திர செயல்பாட்டை பார்வையிட்டார்.

சிவகாசி, அருப்புக்கோட்டை, சாத்துாரில் உள்ள ஆர்.டி.ஓ., அலுவலகங்களிலும் ஓட்டுப்பதிவு இயந்திரங்களின் செயல்முறைகளை விளக்குவதற்காகவும், பொதுமக்கள் மாதிரி ஓட்டுப்பதிவு செய்து பார்த்துக் கொள்வதற்காகவும் விழிப்புணர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதே போன்று சட்டசபைக்கு ஒரு நடமாடும் ஓட்டுப்பதிவு வாகனம் ஜன. 25 முதல் தேர்தல் அறிவிக்கப்படும் நாள் வரை அனைத்து சட்டசபை தொகுதிகளில் வலம் வரும். மாதிரி வாக்குப்பதிவு செய்து பார்த்துக் கொள்ளலாம் என்றும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த விபரங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்றும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us