/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஆபாச நடனமாடிய அர்ச்சகர்கள் மீது வழக்கு பதிவு கைது செய்ய போலீசார் தீவிரம்
/
ஆபாச நடனமாடிய அர்ச்சகர்கள் மீது வழக்கு பதிவு கைது செய்ய போலீசார் தீவிரம்
ஆபாச நடனமாடிய அர்ச்சகர்கள் மீது வழக்கு பதிவு கைது செய்ய போலீசார் தீவிரம்
ஆபாச நடனமாடிய அர்ச்சகர்கள் மீது வழக்கு பதிவு கைது செய்ய போலீசார் தீவிரம்
ADDED : ஜூன் 27, 2025 02:59 AM
ஸ்ரீவில்லிபுத்துார்:ஆபாச நடனமாடிய விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் பெரிய மாரியம்மன் கோயில் உதவி பூஜாரி கோமதிவிநாயகம், வினோத், கணேசன் ஆகியோர் மீதும், இந்த வீடியோவை பரப்பிய முன்னாள் பூஜாரி ஹரிஹரன் மகன் சபரிநாதன் மீதும் 3 பிரிவுகளில் ஸ்ரீவில்லிபுத்துார் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தலைமறைவான 4 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துாரில் ஹிந்து சமய அறநிலைய துறையின் கீழ் உள்ள பெரிய மாரியம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு ஆண்டுதோறும் நடக்கும் பூக்குழி திருவிழாவில் 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்குவது வழக்கம்.
இந்நிலையில் இக்கோயிலில் உதவி பூஜாரியாக தினக்கூலி அடிப்படையில் பணியாற்றுபவர் கோமதிவிநாயகம். இவரும் அவரது நண்பர்கள் சிலரும் ஆபாசமாக நடனமாடிய வீடியோவும், கோயிலுக்கு வந்த பெண் பக்தர்கள் இருவரை ஜன்னல் வழியாக பார்க்கச் செய்து கோயிலுக்குள் ஒளிந்து விபூதியை அடித்து அதை பார்த்து மகிழ்ந்த வீடியோவும் சமூக வலைத்தளங்களில் பரவியது. இது பக்தர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது குறித்து ஸ்ரீவில்லிபுத்துாரை சேர்ந்த வழக்கறிஞர் பாண்டியராஜ் டவுன் போலீசில் புகார் அளித்தார். இதில் வீடியோவை சமூக வலைத்தளங்களில் பரப்பிய சபரிநாதன் மீதும், ஆபாச நடனம் ஆடிய கோமதி விநாயகம், அவரது நண்பர்கள் வினோத், கணேசன் மற்றும் சிலர் மீது ஆபாசமாக ஆடுதல், வீடியோ எடுத்தல், மீடியாவில் பரப்புதல் போன்ற குற்றங்களுக்கு 3 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
4 பேரும் தலைமறைவு ஆகிவிட்டதால் அவர்களை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக டி.எஸ்.பி. ராஜா தெரிவித்தார்.