/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம்

ADDED : ஜூலை 19, 2025 12:23 AM

சாத்துார்: சாத்துார் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு நேற்று ஆடி முதல் வெள்ளிக்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்திருந்தனர்.
ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு இளநீர் பால் பன்னீர் திருமஞ்சனம்உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் பலரும் பொங்கல் வைத்தும் முடி காணிக்கை செலுத்தியும் காது குத்தியும் மாவிளக்கு எடுத்தும் நேர்த்தி கடன் செலுத்தினர்.கோயில் பரம்பரை பூஜாரிகள் அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூஜாரி, ஹிந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் இளங்கோவன் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
சாத்துாரில் இருந்து இருக்கன்குடிக்கு அரசு டவுன் பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட்டது.போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.