/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஊராட்சிகளில் அத்தியாவசிய செலவு செய்ய அனுமதிக்கு காத்திருப்பு; அவசர பணிகள் செய்ய திணறும் ஊராட்சி செயலர்கள்
/
ஊராட்சிகளில் அத்தியாவசிய செலவு செய்ய அனுமதிக்கு காத்திருப்பு; அவசர பணிகள் செய்ய திணறும் ஊராட்சி செயலர்கள்
ஊராட்சிகளில் அத்தியாவசிய செலவு செய்ய அனுமதிக்கு காத்திருப்பு; அவசர பணிகள் செய்ய திணறும் ஊராட்சி செயலர்கள்
ஊராட்சிகளில் அத்தியாவசிய செலவு செய்ய அனுமதிக்கு காத்திருப்பு; அவசர பணிகள் செய்ய திணறும் ஊராட்சி செயலர்கள்
UPDATED : ஜூலை 30, 2025 08:20 AM
ADDED : ஜூலை 30, 2025 07:07 AM

விருதுநகர் மாவட்டத்தில் 11 ஊராட்சி ஒன்றியங்களும் 450 ஊராட்சிகளும் உள்ளன. மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் வளர்ச்சி பணிகள் உள்ளிட்டவை ஊராட்சிகள் மூலம் செய்யப்படுகிறது. 2025 ஜனவரியுடன் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்கால முடிவடைந்த நிலையில், அந்தந்த ஊராட்சி செயலாளர்கள் பணிகளை செய்து வருகின்றனர். மக்களுக்கு குடிநீர் வழங்குதல், சாலை பராமரிப்பு, தெரு விளக்கு பராமரிப்பு ,மத்திய மாநில அரசுகளின் வளர்ச்சி திட்ட பணிகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பணிகளை செய்கின்றனர்.
அரசு ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியங்களுக்கும் பி.டி.ஓ., க்கள் செயல் அலுவலர்களாக நியமித்துள்ளனர். ஊராட்சிகளின் செயலர்கள் தங்கள் ஊராட்சிகளுக்கு செய்ய வேண்டிய வளர்ச்சிப் பணிகள் அத்தியாவசிய பணிகள் ஆகியவற்றை செயல் அலுவலர்களுடன் அனுமதி பெற்று தான் செய்ய வேண்டும்.
ஊராட்சிகளில் 5 ஆயிரத்திற்கு குறைவான நிதியில் பணிகளை செய்ய வேண்டும் என்றால் உரிய அனுமதி பெற்று செய்யலாம். 5 ஆயிரத்திற்கு மேல் செய்யக்கூடிய பணிகளுக்கு ஓவர்சியர், டெபுடி பி.டி.ஓ., பி.டி.ஓ., ஆகியோர்களிடம் ஒப்புதல் பெற்று பணிகளை செய்ய வேண்டி உள்ளது.
குடிநீர் மின் மோட்டார் பழுது உள்ளிட்ட அவசியமான பணிகளை உடனடியாக செய்வதற்கு கூட செயலர்களால் முடிவதில்லை. உரிய அனுமதி பெற்று பழுதுகளை சரி செய்ய பல நாட்கள் ஆகிவிடுகிறது. இதனால் பல ஊராட்சிகளில் குடிநீர் பிரச்னை தலை விரித்து ஆடுகிறது. பல ஊராட்சிகளில் 20 நாட்களாகியும் கூட குடிநீரை முறையாக விநியோகம் செய்ய முடியவில்லை.
அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த பாலையம்பட்டி ஊராட்சியில் ஒரு சில பகுதிகளில் ஒரு மாதமாக தண்ணீர் வரவில்லை என மக்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகை இட்டும் மறியல் செய்தும் வரு கின்றனர். மின்மோட்டார் பழுது என்றால் பழுதை சரி செய்வதற்கு குறைந்தபட்சம் 5 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவாகிறது. இதை சரி செய்வதற்கு உரிய அனுமதி பெற கால தாமதம் ஆகிறது.
ஊராட்சி செயலர்களுக்கு அத்தியாவசிய பணிகளை உடன் சரி செய்ய உரிய அனுமதியை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சி தலைவர்கள் இருந்தபோது ஒழுங்காக முறையாக நடந்த பணிகள் தற்போது அவர்கள் பதவிக்காலம் முடிந்த பின் செயலர்கள் முறையாக செய்வதில்லை என்ற அதிருப்தி மக்களிடம் உள்ளது.
அரசு ஊராட்சி செயலர்களுக்கு அத்தியாவசிய பணிகளை உடனடியாக செய்வதற்கான நிதியை வழங்க மாவட்ட நிர்வாகம் சிறப்பு அனுமதி வழங்க வேண்டுமென மக்கள் விரும்புகின்றனர்.