/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குழாய் உடைந்து 10 நாளாக வீணாகும் குடிநீர்
/
குழாய் உடைந்து 10 நாளாக வீணாகும் குடிநீர்
ADDED : ஜூலை 16, 2025 01:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த சுக்கிலநத்தம் அய்யனார் கோயில் அருகே தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட பகிர்மான குழாய் அருகில் புதிய குழாய் அமைப்பதற்கு தோண்டிய போது குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது.
பத்து நாட்களாகியும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினால் சரி செய்ய நடவடிக்கை இல்லை. குடிநீருக்காக கிராமங்களில் அலையும் நிலையில், சுக்கில நத்தம் பகுதியில் குடிநீர் வீணாகவும் ரோடு ஓரங்களில் ஓடுகிறது.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினர் உடனடியாக குழாயை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.