/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சாத்துார் வெங்கடாசலபுரத்தில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
/
சாத்துார் வெங்கடாசலபுரத்தில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
சாத்துார் வெங்கடாசலபுரத்தில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
சாத்துார் வெங்கடாசலபுரத்தில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
ADDED : ஜூன் 28, 2025 11:25 PM

சாத்துார்: சாத்துார் வெங்கடாசலபுரத்தில் குழாய் உடைந்து குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது.
வெங்கடாசலபுரம் ஊராட்சியில் எஸ். ஆர். நாயுடு நகர் சிதம்பரம் நகர் குறிஞ்சி நகர் என்.ஜி. ஓ. காலனி, குயில் தோப்பு ஆகிய நகர்கள் உள்ளது. இருக்கன்குடி அணையில் ஊராட்சிக்காக ஒரு குடிநீர் உறை கிணறு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கிணற்றில் இருந்த தண்ணீர் எடுக்கப்பட்டு குழாய்கள் மூலம் எஸ். ஆர் .நாயுடு நகரில் துணை சுகாதார நிலையம் அருகில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டிக்கு கொண்டு வந்து நிரப்பப்பட்டு பின்னர் நகர் பகுதிக்கு விநியோகம் செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த பகுதியில் உள்ள குடிநீர் பகிர்மான குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது.ஏற்கனவே இந்த பகுதியில் குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டதால் சாலைகள் முழுவதும் குண்டும் குழியுமாக காணப்படுகின்றன.
இந்த நிலையில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு வெளியாகும் தண்ணீர் சாலையில் உள்ள பள்ளத்தில் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைகின்றனர். ஊராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து உடைந்த குழாயை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.