ADDED : ஜன 21, 2026 05:51 AM
சாத்துார்: இருக்கன்குடி அணையில் இருந்து பாசனத்திற்காக நேற்று தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அர்ச்சுனா நதி, வைப்பாறு நதிகளுக்கு இடையில் இருக்கன் குடி அணை கட்டப்பட்டுள்ளது. துாத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் தாலுகா கீழ்நாட்டு குறிச்சி, அயன் வடமலாபுரம், மாசார்பட்டி, மேலக்கரந்தை, ஆகிய கண்மாய்களுக்கு இருக்கன்குடி அணையில் இருந்து பாசன கால்வாய் மூலம் தண்ணீர் நேற்று திறக்கப்பட்டது.
இந்த கண்மாய்கள் மூலம் 1274 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது.
இருக்கன்குடி அணையில் இருந்து நேற்று பாசன கால்வாய் மூலம் 50 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் துாத்துக்குடி மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அணையின் நிர்வாக பொறியாளர் மலர்விழி உதவி பொறியாளர் கார்த்திகேயன் மற்றும் நீர் பாசன சங்கத் தலைவர்கள் முன்னிலையில் அணை பாசன கால்வாய் திறக்கப்பட்டது.
விவசாயிகள் மலர் துாவி வரவேற்றனர்.
