ADDED : டிச 26, 2025 05:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்: வடகிழக்கு பருவமழை துவக்கத்திலிருந்து ஏப்ரல் மாதம் இறுதி வரை தமிழகத்திற்கு ஏராளமான பறவைகள் வலசை வருவது வழக்கம். அப்போது வனத்துறை சார்பில் நீர்நிலை, நிலப் பரப்பு பறவைகள் என 2 கட்டமாக பறவைகள் கணக்கெடுப்பு செய்யப்படுகிறது.
இந்த ஆண்டும் டிச. 27, 28ல் தேவதானம், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு வனச்சரக பகுதியில் அணைகள், கண்மாய்களிலும், குல்லூர் சந்தை, இருக்கன்குடி உட்பட 25 இடங்களில் நீர்நிலை பறவைகள் கணக்கெடுப்பு நடக்கவுள்ளது. பறவை ஆர்வலர்கள், மாணவர்கள், தன்னார்வலர்கள் பங்கேற்கலாம் என வனத்துறை தெரிவித்துள்ளது.

