UPDATED : ஆக 12, 2026 05:19 PM
ADDED : ஆக 12, 2026 05:11 PM
அ நிறம் | அளவு
திருச்சுழி:திருச்சுழி குண்டாற்றில் ஆடி அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.
திருச்சுழி ஸ்தலம் ஆனது காசி, ராமேஸ்வரம் புண்ணிய ஸ்தலங்களுக்கு ஈடானது. 14 பாண்டிய ஸ்தலங்களில் 10 வது ஸ்தலம் திருச்சுழியாக உள்ளது. ஆடி அமாவாசை, தை அமாவாசை நாட்களில் திருச்சுழி குண்டாற்றில் பக்தர்கள் திதி , தர்ப்பணம் செய்ய வருவர். நேற்று ஆடி அமாவாசையை முன்னிட்டு காலை 5:00 மணி முதல் வெளியூர்களிலிருந்து பக்தர்கள் குண்டாற்றில் குளித்து, தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். பின்னர், திருமேனிநாதர் கோவிலுக்கு சென்று மோட்ச தீபம் ஏற்றி சாமி தரிசனம் செய்தனர்.
