/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
உள்ளாட்சிகளில் நீர்நிலை கணக்கெடுப்பு
/
உள்ளாட்சிகளில் நீர்நிலை கணக்கெடுப்பு
ADDED : ஜூலை 19, 2025 12:27 AM
விருதுநகர்: கலெக்டர் சுகபுத்ரா செய்திக்குறிப்பு: 7வது சிறுபாசனக் கணக்கெடுப்பு, 2வது நீர்நிலை கணக்கெடுப்பு மத்திய அரசின் நுாறு சதவீத நிதி உதவியுடன் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும். தற்போது கிராம அளவில் வி.ஏ.ஓ.,க்களாலும், நகர்ப்புறங்களில் பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சி பகுதிகளில் சம்பந்தப்பட்ட அலுவலர்களால் களப்பணி செய்யப்பட உள்ளது.
இதன் நோக்கம் சிறுபாசனப்பிரிவு சார்ந்த புள்ளி விவரத் தொகுப்பு உருவாக்கப்பட்டு, அவை நீர்வள ஆதாரங்களை மேம்படுத்த அடித்தளமாக பயன்படுத்தப்பட வேண்டும் என்பதே ஆகும்.
மத்திய நிலத்தடி நீர் வாரியத்தால் நிலத்தடி நீர் வளங்களை மதிப்பிட பயன்படுத்தப்படுவதுடன் நீர்வள அமைச்சகத்தில் உள்ள பலபிரிவுகளில் இக்கணக்கெடுப்பு விவரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. கணக்கெடுப்பாளர்கள், மேற்பார்வையாளர்களால் இப்பணி காகிதங்களை பயன்படுத்தாமல் அலைபேசியில் தேசிய தகவல் மைய செயலி மூலம் டிஜிட்டல் முறையில் நடக்கிறது. மக்கள் ஒத்துழைக்க வேண்டும், என்றார்.

