/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
முகமூடி அணிந்து காரில் சென்று ஆசிரியையிடம் நகை பறிப்பு
/
முகமூடி அணிந்து காரில் சென்று ஆசிரியையிடம் நகை பறிப்பு
முகமூடி அணிந்து காரில் சென்று ஆசிரியையிடம் நகை பறிப்பு
முகமூடி அணிந்து காரில் சென்று ஆசிரியையிடம் நகை பறிப்பு
ADDED : ஆக 30, 2025 06:37 AM
திருமங்கலம்; விருதுநகர் வ.உ.சி., தெருவைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியை நாகராணி 48. இவர் நேற்று முன்தினம் தான் வேலை செய்யும் சங்கரலிங்கபுரத்தில் உள்ள பள்ளிக்கு டூவீலரில் சென்றார்.
அவரை பின்தொடர்ந்து காரில் சென்ற முகமூடி அணிந்த வாலிபர்கள் அணிந்திருந்த 6 பவுன் தங்கச்செயின் மற்றும் கைப்பையை பறித்துக் கொண்டு தப்பினர்.
இதுகுறித்து ஆமத்தூர் போலீசார் விசாரித்து வந்தனர்.
நகை பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்கள் டூவீலரில் திருமங்கலம் பகுதியில் செல்வதை அறிந்த விருதுநகர் போலீசார் அவர்களை விரட்டி னர்.
கப்பலூர் டோல்கேட் அருகே அவர்களை வழிமறித்த போலீசார் வழிப்பறியில் ஈடுபட்ட சேலம் அஜித்குமார் 30, திருநெல்வேலி சுரேஷ்குமார் 23, திருச்சி பாலகுமாரை கைது செய்து விருதுநகருக்கு கொண்டு சென்றனர்.