ADDED : ஆக 27, 2026 06:53 PM
அ நிறம் | அளவு
ஸ்ரீவில்லிபுத்துார், ஆக 28-
ஸ்ரீவில்லிபுத்துாரில் நெசவாளர் முன்னேற்ற தொழிலாளர் சங்கத்தின் சார்பில், தொடர்ந்து வேலை வாய்ப்பு வழங்குதல், புதிய ரக உற்பத்தி சேலை நெசவுக்கு முந்தைய செலவினங்களை அரசு ஏற்பது, புதிய ரக வேலைக்கு நியாயமான கூலி நிர்ணயம் செய்தல், உதவி இயக்குனர் அறிவித்தபடி நிவாரண உதவி தொகை வழங்குதல், கூட்டுறவு சங்க உறுப்பினர்களை தரக்குறைவாக பேசிய மேலாளர் மீது நடவடிக்கை எடுத்தல், சங்க முறைகேடுகளை தடுத்தல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாலை 4:00 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க நிர்வாகிகள் குத்தாலிங்கம், அழகர், முருகன், பால்ராஜ் பேசினர். ஏராளமான நெசவாளர்கள் பங்கேற்றனர்.
