ADDED : செப் 08, 2026 04:41 PM
அ நிறம் | அளவு
வத்திராயிருப்பு, செப்.9-
வத்திராயிருப்பு அருகே சுந்தரபாண்டியத்தில் நெசவாளர்கள் சார்பில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பு கொடுத்தல், புதிய ரக சேலை ஒன்றுக்கு கூலி ரூ. 170 என நிர்ணயம் செய்தல், தேர்தல் அறிக்கையில் சொன்னபடி பென்ஷன் பணம் ரூ.3000 வழங்குதல், 4 மாதமாக வேலை இழந்த நெசவாளர்களுக்கு ரூ. 10 ஆயிரம் வழங்குதல், தற்போது நெசவாளர்களின் கையில் உள்ள சேலைகளை சங்கங்கள் மூலமாக உடனடியாக கொள்முதல் செய்தல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட நெசவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். கிருஷ்ணன் கோவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
