UPDATED : செப் 19, 2026 06:44 PM
ADDED : செப் 19, 2026 06:03 PM
அ நிறம் | அளவு
ராஜபாளையம்:ராஜபாளையத்தில் நெசவாளர்கள் கூலி உயர்வு கோரி தெற்கு போலீஸ் ஸ்டேஷன் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ராஜபாளையம் தெற்கு வைத்தியநாதபுரம் பகுதி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தை சேர்ந்த கைத்தறி நெசவாளர்கள் தமிழக அரசின் புதிதாக அறிமுகம் செய்த இலவச சேலைக்கான கூலி நிர்ணயம், வேலை இழப்பு மாதங்களுக்கு இழப்பீடு, தேங்கியுள்ள சேலைகள் கொள்முதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் கூட்டுறவு சங்கம் அருகே நெசவாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தெற்கு போலீஸ் ஸ்டேஷன் முன்பு நுாற்றுக்கும் அதிகமான பெண்கள் உள்ளிட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கைகள் அனுப்பப்படும் என போலீசார் பேச்சு வார்த்தையில் மறியலை கைவிட்டனர்.
