ADDED : செப் 23, 2026 04:21 PM
அ நிறம் | அளவு
ஸ்ரீவில்லிபுத்துார், செப்.24-
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆறு ஊர் சாலியர் சமுதாயத்தின் சார்பில் நெசவாளர்களின் 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று காலை 10:00 மணிக்கு முதலியார்பட்டி, மடத்துப்பட்டி, ஊரணிப்பட்டி, கீழப்பட்டி, மாயாண்டி பட்டி, மாரியம்மன் கோவில் தெரு கிழக்கு, மேற்கு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான நெசவாளர்கள் ஊர்வலமாக ராமகிருஷ்ணாபுரம் வந்தனர்.
தொடர் வேலை வாய்ப்பு, ஓய்வூதியம், கூலி உயர்வு, மருத்துவ, கல்வி நிதி வழங்குதல் உட்பட 17 கோரிக்கைகளை வலியுறுத்தி கோசமிட்டனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். இன்ஸ்பெக்டர் மாரியப்பன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
