ADDED : மார் 05, 2024 06:05 AM

அருப்புக்கோட்டை, : அருப்புக்கோட்டையில் பா.ஜ., நகர விளையாட்டு திறன் மேம்பாட்டு பிரிவு சார்பாக வலு தூக்கும் போட்டிகள் நடந்தது.
அருப்புக்கோட்டை எஸ் பி கே கல்லூரி ரோட்டில் உள்ள மாஸ்டர் ஜிம் அரங்கில் நடந்த பளு தூக்கும் போட்டிகளில் 56, 62, 70, 77, 85 கிலோ எடை பிரிவுகளில் நடந்தது. பெண்களுக்கான பிரிவுகளும் தனியாக நடந்தது.
இதில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டு தங்கள் உடல் திறமை வெளிப்படுத்தினர். வெற்றி பெற்ற இளைஞர்களுக்கு பாஜ., மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் பரிசுகள், கோப்பைகள், வெள்ளிக் காசு, ரொக்க பணம் வழங்கினார்.
மாவட்ட பார்வையாளர் வெற்றிவேல் உட்பட, நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை நகர விளையாட்டு திறன் மேம்பாட்டு பிரிவு நிர்வாகிகள், மாஸ்டர் ஜிம் உரிமையாளர்கள் செய்தனர். ஏற்பாடுகளை நகர விளையாட்டு திறன் மேம்பாட்டு பிரிவு நிர்வாகிகள், மாஸ்டர் ஜிம் உரிமையாளர்கள் செய்தனர்.

