ADDED : பிப் 04, 2024 04:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆதியோகி ரதத்திற்கு பக்தர்கள் வரவேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
நேற்று காலை 7:00 மணிக்கு மடவார்வளாகம் வைத்தியநாத சுவாமி கோயில் வாசலில் குருபூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் காலை 8:00 மணி முதல் இரவு 8:00 நகரின் முக்கிய வீதிகள் வழியாக ரதம் வலம் வந்து. பொதுமக்கள் வரவேற்று தரிசனம் செய்தனர்.
ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் சமுத்திரராஜ் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர். டவுன் இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.