/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மழை முன்னெச்சரிக்கைக்கு பெற்றோருடன் வாட்ஸ் ஆப் குழுக்கள்
/
மழை முன்னெச்சரிக்கைக்கு பெற்றோருடன் வாட்ஸ் ஆப் குழுக்கள்
மழை முன்னெச்சரிக்கைக்கு பெற்றோருடன் வாட்ஸ் ஆப் குழுக்கள்
மழை முன்னெச்சரிக்கைக்கு பெற்றோருடன் வாட்ஸ் ஆப் குழுக்கள்
ADDED : அக் 21, 2025 03:18 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் பள்ளி இருக்கும் பகுதியில் தண்ணீர் தேங்குவது பற்றியும், அந்தந்த தலைமை ஆசிரியர்களே விடுமுறைக்கு முடிவெடுத்து கொள்ளலாம் என்றால் எளிதில் அறிவிப்பதற்கும் பெற்றோர், பள்ளி நிர்வாகம் இணைந்த வாட்ஸ் ஆப் குழுக்கள் அரசு, உதவி பெறும் பள்ளிகளில் விரைந்து ஏற்படுத்த வேண்டும்.
2024ல் நவ. மாதம் பெய்த மழையின் போது பள்ளிக்கான விடுமுறை முடிவை அந்தந்த பள்ளிகளே எடுத்துக் கொள்ளலாம் என மாவட்ட நிர் வாகம் அறிவித்தது. ஆனால் காலை நேரங்களில் தொடர் மழை பெய்தது மாணவர்களை பாடாய் படுத்தியது. பல பள்ளிகள், துறை அதிகாரிகளுக்கு பயந்து விடுமுறை அளிக்காமல் பள்ளி வைத்தனர். இது பலருக்கு பாதிப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அப்போதே மாவட்ட நிர் வாகம் அரசு பள்ளிகளில் வாட்ஸ் ஆப் குழுக்களை ஏற்படுத்த உத்தரவிட்டது. பெற்றோர்களை அதில் இணைத்து விடுமுறை, பள்ளி பகுதியில் தண்ணீர் தேங்கியிருந்தால் அதற்கான எச்சரிக்கை சேர்த்தும் குறுந்தகவலாக மழைக் காலங்களில் அளிக்க வேண்டும் என அறிவுறுத்தியது.
2025க்கான வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. மிதமான மழை பெய்யும் போது பள்ளிகளே முடிவெடுத்து விடுமுறை அறிவிக்கலாம் என்றால் மாணவர்களை குறுந்தகவல் சென்றடையாத நிலை ஏற்படும்.
எனவே மாணவர்களின் பெற்றோர், தலைமை ஆசிரியர்களின் தொடர்பை பலப்படுத்தும் வகையில் வாட்ஸ் ஆப் குழுக்கள் ஏற்படுத்துவதை பள்ளிக் கல்வித்துறை உறுதி செய்ய வேண்டும். இதிலும் சிரமங்கள் இருந்தால் பள்ளிக்கு என ஒரு எண் கொடுத்து அதை பெற் றோரிடம் வழங்கி விடுமுறை அறிவிப்பு பற்றி தெரிந்து கொள்ளலாம் என கூறலாம்.