/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மலையடிவாரத்தில் காட்டுப்பன்றியால் பாதித்த பயிர்களுக்கு இழப்பீடு எப்போது
/
மலையடிவாரத்தில் காட்டுப்பன்றியால் பாதித்த பயிர்களுக்கு இழப்பீடு எப்போது
மலையடிவாரத்தில் காட்டுப்பன்றியால் பாதித்த பயிர்களுக்கு இழப்பீடு எப்போது
மலையடிவாரத்தில் காட்டுப்பன்றியால் பாதித்த பயிர்களுக்கு இழப்பீடு எப்போது
ADDED : மே 19, 2025 05:41 AM
ராஜபாளையம் : ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையடிவார கோயில் காட்டுப்பன்றியால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்காததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
ராஜபாளையம் சேத்துார், தேவதானம் உள்ளிட்ட மலையை ஒட்டிய பகுதிகளில் அதிக அளவில் மா, தென்னை, வாழை நெல் பயரிடப்பட்டுள்ளது. ஏற்கனவே இப்பகுதிகளில் மலையை ஒட்டி உள்ள கண்மாய், ஓடைகள், புதர்கள் உள்ளிட்ட பகுதிகளில் பதுங்கி உள்ள காட்டு பன்றிகள் இரவு நேரங்களில் விலை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில் 5 மாதம் முன்பு சேத்துார் சிலம்பநேரி கண்மாய் ஒட்டி உள்ள நெல் வயல்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களை காட்டுப் பன்றிகள் சேதப்படுத்திய நிலையில் சேதத்தை ஆய்வு செய்த வனத்துறையினர் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பரிந்துரை செய்தனர்.
ஆனால் தற்போது வரை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்காத நிலையில் இரண்டாம் போக சாகுபடி முடிந்து அறுவடைக்கு தயாராக நெற்பயிர்கள் விளைந்துள்ளன. இருப்பினும் தற்போது இப்பகுதியிலும் பிராவடி கண்மாய் ஒட்டிய நெல் வயல்களிலும் பன்றிகள் சேதம் ஏற்படுத்துவது தொடர்ந்து வருகிறது.
இது குறித்து விவசாயி கணேசன்: கடந்த முறை நெற்பயிர்களை காத்துக் கொண்டீர்கள் சேதப்படுத்திய போது வனத்துறையினர் வருவாய்த்துறை ஆய்வு செய்து இழப்பீடு வழங்குவதாக தெரிவித்தும் இதுவரை இழப்பீடு வழங்கவில்லை. தற்காலிக ஏற்பாடாக ரசாயன கலவை தடவிய துணிகளை சுற்றி கட்டி தடுத்தனர். அடுத்த மழையின் போது ரசாயன வீரியம் குறைந்து மீண்டும் இப் பிரச்சனை தற்போது வரை தொடர்கிறது.