/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீவில்லிபுத்துார் புதிய பஸ் ஸ்டாண்ட் திறப்பு எப்போது
/
ஸ்ரீவில்லிபுத்துார் புதிய பஸ் ஸ்டாண்ட் திறப்பு எப்போது
ஸ்ரீவில்லிபுத்துார் புதிய பஸ் ஸ்டாண்ட் திறப்பு எப்போது
ஸ்ரீவில்லிபுத்துார் புதிய பஸ் ஸ்டாண்ட் திறப்பு எப்போது
ADDED : ஜூன் 13, 2025 02:43 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துாரில் புதிய பஸ் ஸ்டாண்ட் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் ஓரிரு மாதங்களில் பணிகள் முழு அளவில் முடிந்து பஸ் ஸ்டாண்ட் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்ரீவில்லிபுத்துாரிலிருந்து சிவகாசி செல்லும் ரோட்டில் நான்கு வழிச்சாலையின் கீழ்பகுதியில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணிகள் கடந்த ஆண்டு முதல் இரவு, பகலாக நடந்து வருகிறது. கடைகள், ஓட்டல்கள், வாகன காப்பகம், சுகாதார வளாகம் போன்ற கட்டுமான பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது பஸ் ஸ்டாண்டை சுற்றி காம்பவுண்ட் சுவர் கட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தார்ரோடு அமைக்கப்பட்டு கடந்த ஏப்ரல் மாத இறுதியில் பஸ் ஸ்டாண்ட் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோடு உயர்ந்தும், பஸ் ஸ்டாண்ட் உட்பகுதி ரோடு தாழ்ந்தும் காணப்பட்டதால் அதனை உயர்த்தி ரோடு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதனால் இன்னும் ஓரிரு மாதங்களில் முழு அளவில் பணிகள் முடிந்து ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் பஸ் ஸ்டாண்ட் திறக்கப்பட்டு செயல்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.