UPDATED : நவ 26, 2026 04:50 PM
ADDED : நவ 26, 2026 04:50 PM

அ நிறம் | அளவு
சிவகாசி: சிவகாசி தாலுகா அலுவலகம் முன்பு சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் சார்பில் த.வெ.க., அரசின் தேர்தல் வாக்குறுதியான டாப்ஸ் திட்டத்தை முற்றிலும் ஒழிக்கப்பட்டு அனைவருக்கும் பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்தப்படும் என்ற வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும், ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு பணிக்கொடை வழங்கிடவும் வலியுறுத்தி விசில் ஊதி ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் மலர் பாண்டியன் தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் மாவட்ட செயலாளர் வைரவன், மாநில ஒருங்கிணைப்பாளர் விக்னேஸ்வரன் பேசினர். அரசு ஊழியர் சங்கம் மாவட்ட துணை தலைவர் மாசிலாமணி நன்றி கூறினார்.
