தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ பா.ஜ.,வில் இணைந்தது ஏன்? விளக்கம் சொல்லும் எம்.எல்.ஏ.,

 பா.ஜ.,வில் இணைந்தது ஏன்? விளக்கம் சொல்லும் எம்.எல்.ஏ.,

 பா.ஜ.,வில் இணைந்தது ஏன்? விளக்கம் சொல்லும் எம்.எல்.ஏ.,


ADDED : ஏப் 22, 2026 10:57 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 22, 2026 10:57 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சாத்துார்:'' உதயசூரியன் சின்னத்தில் வெற்றி பெற்ற தனக்கு அதிகாரிகளிடம் மரியாதை இல்லாததால், பா.ஜ.,வில் இணைந்தேன்,'' என சாத்துார் ம.தி.மு.க., - எம்.எல்.ஏ., ரகுராமன் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:

பட்டாசு ஆலைகளில் வருவாய்த் துறையினர் சோதனை செய்து 'சீல்' வைக்கின்றனர். வாழ்வாதாரத்திற்காக அதிக ஆட்கள் வேலை செய்யும்போது விபத்து, உயிரிழப்பு ஏற்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, ‛சஸ்பெண்ட்' செய்யப்படும் ஆலைகளில் குறைகளை நிவர்த்தி செய்தால், உடனடியாக ஆலையை திறக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் வலியுறுத்தினேன். ஆனால், அதை கண்டு கொள்ளவில்லை. இதனால், கவலையில் ஆழ்ந்து, தேர்தல் பணியில் ஈடுபடவில்லை. தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியோர் என்னை சந்தித்தனர். அவர்களது வேண்டுகோளை ஏற்று பா.ஜ.,வில் இணைந்து, தேர்தல் பணி செய்கிறேன்.

இவ்வாறு ரகுராமன் கூறினார்.

ரகுராமன், ம.தி.மு.க பொதுச் செயலர் வைகோவுக்காக அரசு டாக்டர் பணியை விட்டுவிட்டு கட்சி பணி செய்தவர். 2016ல் மக்கள் நல கூட்டணி சார்பில் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். மீண்டும் ம.தி.மு.க., - தி.மு.க., கூட்டணி அமைந்ததும், 2021ல் உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றி பெற்றார். ம.தி.மு.க., விருதுநகர் மத்திய மாவட்ட செயலராகவும் இருந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us