தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ சிறப்பு பாதுகாப்பு சட்டத்தை செயல்படுத்த வேண்டும் விக்கிரமராஜா வலியுறுத்தல்

 சிறப்பு பாதுகாப்பு சட்டத்தை செயல்படுத்த வேண்டும் விக்கிரமராஜா வலியுறுத்தல்

 சிறப்பு பாதுகாப்பு சட்டத்தை செயல்படுத்த வேண்டும் விக்கிரமராஜா வலியுறுத்தல்


ADDED : மார் 15, 2026 06:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 15, 2026 06:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்: ''வணிகர்ளுக்கான சிறப்பு பாதுகாப்பு சட்டத்தை மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்த வேண்டும்,'' என, விருதுநகரில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா வலியுறுத்தினார்.

பேரமைப்பு மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற அவர் பின் கூறியதாவது: ஆன்லைன் வர்த்தகம் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் சாமானிய வணிகர்களை துடைத்தெறிந்து விடுவார்கள். ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 2 லட்சம் கடைகளின் வாடகை குறைக்கப்பட்டுள்ளது.

இதே போல சாமானிய வியாபாரிகளை கணக்கீட்டு, அவர்களது கடை வாடகையை குறைக்க வேண்டும். மாநகராட்சி, நகராட்சியின் கடைகளை புதுப்பிக்கும் போது ரூ.2000 முதல் ரூ.5000 வரை வாடகை உயரும் நிலை உள்ளது. அந்தந்த மாவட்டங்களில் வியாபாரிகளின் நிலைக்கு ஏற்ப வாடகையை உயர்த்த வேண்டும்.

வணிக காஸ் சிலிண்டரின் விலை ஏற்கனவே உயர்ந்து விட்டது. தற்போது சிலிண்டர்கள் கிடைக்காததால் பொருட்களின் விலையை உயர்த்த வேண்டியுள்ளது. காஸ் சப்ளை சீரானதும் உயர்த்தப்பட்ட விலைகள் மீண்டும் குறைக்கப்படும். எங்கள் கோரிக்கைகளை அ.தி.மு.க., தி.மு.க., கட்சிகளுக்கும் அளித்துள்ளோம். இக்கோரிக்கைகளை நிறைவேற்றி தருவோம் என எழுத்துப்பூர்வமாக தெரிவிப்பவர்களுக்கு தேர்தலில் எங்கள் ஆதரவை தெரிவிப்போம் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us