ADDED : செப் 08, 2025 06:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் அறிவு திருக்கோயில் 21வது ஆண்டு விழா, அன்னை லோகாம்பாள் ஜெயந்தி விழா, மனைவி நல வேட்பு விழா ஆகிய முப்பெரும் விழாக்கள் நடந்தது.
அறக்கட்டளை தலைவர் சர்வஜித் தலைமை வகித்தார். அருள்நிதி வேலாயுதம், பேராசிரியர் காலசாமி முன்னிலை வகித்தனர். பொருளாளர் முருகன் வரவேற்றார்.
செயலாளர் ராமர் ஆண்டறிக்கை வாசித்தார். உலக சமுதாய சேவா சங்க பொதுச் செயலாளர் சேகர், பேராசிரியர் கலாவதி பேசினர்.
விழாவில் சிறப்பு தம்பதியினர் ராஜா- கவிதா, ரஜினி-இந்திரா தேவி உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட தம்பதியினர் பங்கேற்று, பரஸ்பரம் ஒருவருக்கு ஒருவர் மலர் மற்றும் கனி கொடுத்து மனைவி நல வேட்பு உறுதிமொழி எடுத்தனர். விழா ஏற்பாடுகளை மனவளக்கலை மன்ற அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.