/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நரிக்குடி முக்கு ரோட்டில் ரவுண்டானா அமைக்கப்படுமா
/
நரிக்குடி முக்கு ரோட்டில் ரவுண்டானா அமைக்கப்படுமா
ADDED : அக் 31, 2025 01:45 AM
நரிக்குடி:  நரிக்குடி முக்கு ரோட்டில் அடிக்கடி விபத்து நடப்பதால், தடுக்க ரவுண்டானா ஏற்படுத்த அமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
அருப்புக்கோட்டை ---- பார்த்திபனூர் மெயின் ரோட்டில் நரிக்குடி உள்ளது.  ராமேஸ்வரம்,  திருச்சுழி உள்ளிட்ட புண்ணிய ஸ்தலங்களுக்கு வெளி மாவட்டம்,  மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் இந்த வழித்தடத்தில் வந்து செல்கின்றனர்.
எப்போதும் வாசன போக்குவரத்து மிகுந்து காணப்படும்.  வாகனங்கள் வேகமாக வருவதால் முக்கு ரோட்டில்  அடிக்கடி விபத்து ஏற்பட்டு, வருகிறது.  திருப்புவனம் ரோட்டில்  இருந்து வரும் வாகனங்கள், திரும்பும் வாகனங்கள் என அடிக்கடி  விபத்தில் சிக்குகின்றன. விபத்தை தடுக்க வேகத்தடை அமைக்கப்பட்டது.
அதையும்  மீறி  வாகனங்கள் வேகமாக வருவதால் விபத்து ஏற்படுகிறது.  இது தொடர்கதையாக இருந்து வருகிறது.    இதனை தவிர்க்க  முக்கு ரோட்டில் ரவுண்டான  அமைக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

