/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மதுரை ரோட்டில் கழிவுநீர் செல்ல வழி ஏற்படுத்தப்படுமா
/
மதுரை ரோட்டில் கழிவுநீர் செல்ல வழி ஏற்படுத்தப்படுமா
மதுரை ரோட்டில் கழிவுநீர் செல்ல வழி ஏற்படுத்தப்படுமா
மதுரை ரோட்டில் கழிவுநீர் செல்ல வழி ஏற்படுத்தப்படுமா
ADDED : மே 17, 2025 12:39 AM

விருதுநகர்: விருதுநகர் - மதுரை ரோட்டில் கழிவுநீர் செல்ல வழி ஏற்படுத்த வேண்டும். பாதியில் விடப்பட்ட கழிவுநீர் கால்வாய் பணியை முழுமைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மழை பெய்யும் போது நீர் வடிய வழியின்றி ரோட்டில் தேங்கி நிற்கிறது. சந்தை பேட்டை போன்ற தாழ்வான பகுதிகளில் பாதிப்பு ஏற்படுகிறது. இதன் அருகிலும் வடிகால் வசதிகள் எதுவுமில்லை. இதனால் மழைநீர், கழிவு நீரோடு தேங்கி வாகன ஓட்டிகளை அல்லாட செய்கிறது. மதுரை ரோட்டில் இரண்டு ஆண்டுகள் முன்பு வாறுகால் பணிக்கு தோண்டப்பட்டு தடுப்புகள் வைக்கப்பட்டது. அது தற்போது வரை சரி செய்யப்படவில்லை. அப் பணிகளை விரைந்து முடிக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை வேண்டும்.