தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ ரயில்வே ஸ்டேஷன்களில் அம்ரித் பாரத் திட்ட பணிகள் செய்யப்படுமா:அடிப்படை வசதிகள் இல்லாமல் பயணிகள் தவிப்பு

ரயில்வே ஸ்டேஷன்களில் அம்ரித் பாரத் திட்ட பணிகள் செய்யப்படுமா:அடிப்படை வசதிகள் இல்லாமல் பயணிகள் தவிப்பு

ரயில்வே ஸ்டேஷன்களில் அம்ரித் பாரத் திட்ட பணிகள் செய்யப்படுமா:அடிப்படை வசதிகள் இல்லாமல் பயணிகள் தவிப்பு


ADDED : மார் 01, 2026 07:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 01, 2026 07:07 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஸ்ரீவில்லிபுத்தூர்:விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், விருதுநகர் ரயில்வே ஸ்டேஷன்களில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது போல் சிவகாசி, சாத்தூர், அருப்புக்கோட்டை ரயில்வே ஸ்டேஷன்களையும் மேம்படுத்த மக்கள் பிரதிநிதிகள் தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டசபை தொகுதிகளை சேர்ந்த ஏராளமான மக்கள் தினமும் தங்களது கல்வி, தொழில், வேலைவாய்ப்பு, மருத்துவம் உட்பட பல்வேறு நிகழ்விற்காக மதுரை, கோவை, திருச்சி, சென்னை போன்ற நகரங்களுக்கு அதிகளவில் பயணித்து வருகின்றனர்.

குறைந்த கட்டணம், பாதுகாப்பான பயணம் என்பதால் ரயில் பயணங்களையே மக்கள் அதிகளவில் பயணித்து வருகின்றனர். இதனால் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ரயில்வே ஸ்டேஷனிலும் நாளுக்கு நாள் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இவ்வாறு வரும் பயணிகளின் நலன் காக்க நாடு முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரயில்வே ஸ்டேஷன்களில் அம்ரித் பாரத் திட்ட பணிகளின் கீழ் இருக்கை நிழற்குடை குடிநீர் சுகாதார வளாகம், ஓய்வு அறை, டிஜிட்டல் டிஸ்ப்ளே போர்டுகள், லிப்ட், தங்கும் அறை உட்பட பல்வேறு வசதிகளை ரயில்வே துறை செய்து வருகிறது.

இத்திட்டத்தில் விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர் ரயில்வே ஸ்டேஷன்கள் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடக்கிறது. இதில் ஸ்ரீவில்லிபுத்துார் ரயில்வே ஸ்டேஷனில் அனைத்து பணிகளும் முடிந்து இன்று மதுரையில் நடக்கும் விழாவில் பிரதமர் மோடி மக்களுக்கு அர்ப்பணித்து வைக்கிறார்.

ராஜபாளையம், விருதுநகர் ரயில்வே ஸ்டேஷனில் அமிர்த் பாரத் திட்டப்பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விரைவில் இந்த ரயில்வே ஸ்டேஷன்களில் அனைத்து வசதிகளும் செய்து தந்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது.

இந்நிலையில் மாவட்டத்தின் தொழில் நகரமான சிவகாசி, திருத்தங்கல், சாத்தூர், அருப்புக்கோட்டை ரயில்வே ஸ்டேஷன்கள் போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளது. இதனால் இங்கு வரும் ஏராளமான மக்கள் தினமும் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், விருதுநகர் ரயில்வே ஸ்டேஷன்களில் செய்யப்பட்டுள்ளது போல், தங்களது ரயில்வே ஸ்டேஷன்களிலும் அனைத்து வசதிகளும் செய்து தர வேண்டும் என சிவகாசி, சாத்துார், அருப்புக்கோட்டை மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

நாடு முழுவதும் முதல் கட்ட அம்ரித் பாரதத்திட்ட பணிகள் முடிவடையுள்ள நிலையில் இரண்டாம் கட்டமாக செயல்படுத்தப்பட உள்ள அம்ரித் பாரத் திட்டத்தில் விருதுநகர் மாவட்டத்தில் விடுபட்ட தங்கள் நகர ரயில்வே ஸ்டேஷன்களையும் சேர்த்து அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தர மத்திய அரசுக்கும், ரயில்வே நிர்வாகத்திற்கும் மக்கள் பிரதிநிதிகள் தொடர்ந்து அழுத்தம் தர வேண்டுமென சிவகாசி, சாத்தூர், அருப்புக்கோட்டை நகர மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us