/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நரிக்குடி பகுதியில் சிப்காட் வருமா
/
நரிக்குடி பகுதியில் சிப்காட் வருமா
ADDED : மே 06, 2025 05:53 AM
நரிக்குடி,: நரிக்குடி பகுதியில் சிப்காட் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு, இன்னும் அதற்கான ஏற்பாடுகள் நடைபெறாமல் இருப்பதால் தொழில் முனைவோர் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
நரிக்குடி பகுதியில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வசதிக்காக நரிக்குடி பகுதியில் சிப்காட் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. சிப்காட் அமைப்பதற்காக அகத்தாகுளம் பகுதியில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதற்கான ஏற்பாடுகள் இன்னும் நடைபெறவில்லை.
இதனால் காலதாமதம் ஏற்படுமோ என்கிற அச்சம் உள்ளது. அடுத்து தேர்தல் நெருங்கும் பட்சத்தில் திட்டம் கைவிடப்படுமோ என புலம்புகின்றனர். அதற்குள் விரைந்து சிப்காட் அமைக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழில் முனைவோர் எதிர்பார்க்கின்றனர்.