தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ காலை உணவு திட்ட பணியாளர்களுக்கு  ஊதிய உயர்வு வழங்கப்படுமா

காலை உணவு திட்ட பணியாளர்களுக்கு  ஊதிய உயர்வு வழங்கப்படுமா

காலை உணவு திட்ட பணியாளர்களுக்கு  ஊதிய உயர்வு வழங்கப்படுமா


ADDED : செப் 29, 2026 04:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 29, 2026 04:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்:   தமிழகத்தில் காலை உணவு திட்டம் 6 முதல் 8ம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்யப்பட்டு செப். 22 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கூடுதலான மாணவர்களுக்கு சமைக்க வேண்டியுள்ளதால் அதே ஊதியமான ரூ.2500 வழங்காமல் கூடுதலாக உயர்த்தி வழங்க வேண்டுமென எதிர்பார்க்கின்றனர்..

  காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு 6 முதல் 8ம் வகுப்பு வரை செயல்படுத்தப்பட்டு வருகிறது.  ஊராட்சிகளில் துவக்க, நடுநிலைப் பள்ளிகளில் 50க்கும் குறைவான மாணவர்களுக்கு சமைப்போருக்கு ரூ.3000ம், 50 – 100 மாணவர்கள் வரை உள்ள பள்ளிகளில் ரூ.5 ஆயிரம் இரு ஊழியர்களுக்கு என ஒருவருக்கு ரூ.2500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் எண்ணிக்கை உயர உயர சம்பளத்திற்கான நிதி ஒதுக்கீடும் உயரும். ஆனால் ஒதுக்கீடு உயர்ந்தாலும், ஊழியர்களின் எண்ணிக்கையும் உயர்வதால் ரூ. 2500 முதல் ரூ.3000 வரை தான் சம்பளம் வழங்கப்படுகிறது. 

    பல பள்ளிகளில் காலை உணவு தயார் செய்ய சமையலறை இல்லை. அது அருகில் உள்ள பள்ளிகளில் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கும் இரண்டு பள்ளிகளுக்கும் சேர்த்து சமைப்பதால் சமையலறை இல்லாத பள்ளியில் பணிபுரியும் காலை உணவு திட்ட பணியாளருக்கு ரூ.1500 சம்பளம் வழங்கப்படுகிறது. விரிவாக்கத்தால் துவக்கப்பள்ளிகளோடு, நடுநிலை பள்ளிகளும் இணைவதால் பல பள்ளிகளில் 51 முதல் 100 மாணவர்கள் வரை தான் உள்ளனர். 2 ஊழியர்கள் தான் பெரும்பாலும் பணிபுரிந்து வருகின்றனர். இதனால் ரூ.2500 என்ற மிக குறைந்த ஊதியம் வழங்கப்படுகிறது. 

 காலை நேரம் மட்டும் என்பதால் பணிபுரியும் மகளிர் குழுவினர் வேறு வேலைக்கு செல்கின்றனர். வாய்ப்பில்லாதவர்கள் இந்த பணியை மட்டும் செய்கின்றனர்.  இந்த குறைந்த சம்பளமாக ரூ.4000 முதல் 5000 ஆக  உயர்த்தி வழங்க வேண்டுமென ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us