/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
செயல்படாத நுாலக கட்டடங்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படுமா
/
செயல்படாத நுாலக கட்டடங்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படுமா
செயல்படாத நுாலக கட்டடங்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படுமா
செயல்படாத நுாலக கட்டடங்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படுமா
ADDED : ஏப் 30, 2025 06:27 AM
சாத்துார்; சாத்துார் ஊராட்சி ஒன்றிய கிராமங்களில் செயல்படாமல் உள்ள நுாலக கட்டடங்களை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
சாத்துார் சடையம்பட்டி, இ.முத்துலிங்கபுரம், சத்திரப்பட்டி, ஓ. மேட்டுப்பட்டி தாயில்பட்டி ஆகிய ஊராட்சி களில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட ஊராட்சி நுாலக கட்டடங்கள் செயல்பாட்டிற்கு வராமல் மூடிய நிலையில் உள்ளன.
கடந்த ஆட்சி காலங்களில் ஊராட்சிகள் தோறும் நடத்தப்பட்டு வந்த இந்த நுாலகங்கள் தற்போது செயல்படாமல் உள்ளது. நுாலகங்களுக்காக வாங்கப்பட்ட நுால்கள் தற்போது யாரும் படிக்காமல் துாசி படிந்தும் கரையான் பூச்சி கடித்து அழியும் நிலை உள்ளது.
நுால்கள் வீண் ஆவதை தடுக்க செயல்படாமல் உள்ள ஊராட்சி நுாலகங்களை கண்டறிந்து மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.