/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கிடைக்குமா தாமிரபரணி குடிநீர் வத்திராயிருப்பு மக்கள் ஏக்கம்
/
கிடைக்குமா தாமிரபரணி குடிநீர் வத்திராயிருப்பு மக்கள் ஏக்கம்
கிடைக்குமா தாமிரபரணி குடிநீர் வத்திராயிருப்பு மக்கள் ஏக்கம்
கிடைக்குமா தாமிரபரணி குடிநீர் வத்திராயிருப்பு மக்கள் ஏக்கம்
ADDED : அக் 02, 2025 03:39 AM
வத்திராயிருப்பு : வத்திராயிருப்பு தாலுகாவில் அனைத்து வீடுகளுக்கும் தாமிரபரணி குடிநீர் சப்ளை செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
வத்திராயிருப்பு தாலுகாவில் சுந்தரபாண்டியம், புதுப்பட்டி, வத்திராயிருப்பு, கொடிக்குளம் ஆகிய 4 பேரூராட்சிகளும், ஒன்றியத்திற்குட்பட்ட 27 ஊராட்சிகளும் உள்ளன.இப் பகுதி மக்களுக்கு உள்ளூர் நீர் ஆதாரங்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் உவர்ப்பு தன்மையுடனும், குடிப்பதற்கு ஏற்றதாக இல்லாமலும் உள்ளது. இதனால் சிறுநீரக நோய்களுக்கு மக்கள் ஆளாகும் நிலையும் காணப்படுகிறது.
இதனால் தற்போது அனைத்து கிராமங்களிலும் ஒரு குடம் மினரல் வாட்டர் ரூ.12 வீதம், தினமும் 3 குடம் குடிநீர் வாங்கி குடிப்பதற்கு பயன்படுத்தி வருகின்றனர். இதனால் ஏழை மக்கள் பொருளாதார சிரமத்திற்கும் ஆளாகி வருகின்றனர்.இதனைத் தவிர்க்க குறைந்தபட்சம் மூன்று நாட்களுக்கு ஒரு முறை தாமிரபரணி குடிநீர் வழங்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.