/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அரசு மருத்துவக்கல்லுாரி குடிநீர் பிரச்னைக்கு... தீர்வு வருமா: 4 ஆண்டுகளாகியும் நீடிக்கும் பற்றாக்குறையால் அவதி

ADDED : அக் 30, 2025 03:36 AM

அரசு மருத்துவக்கல்லுாரிக்கு கூட்டுக்குடிநீர் திட்டத்தில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு குடிநீர் விநியோகம் வழங்கப்பட்டு, அடுத்ததாக மருத்துவக்கல்லுாரிக்கு வழங்கப்படுகிறது.
மருத்துவக்கல்லுாரியில் பயிலரங்கம், ஆய்வகம், மாணவர், மாணவிகள் விடுதிகள், முதல்வர் குடியிருப்பு, சமையல் கூடம், உணவு அருந்தும் இடம், நிர்வாக கட்டடம், பேராசிரியர்கள் குடியிருப்புகளுக்கு தண்ணீர் தேவைப்படுகிறது.
ஆனால் பயிலரங்கம், ஆய்வகம், விடுதிகள், முதல்வர் குடியிருப்பின் டேங்க்களை நிரப்புவதற்குள் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் வழங்கப்படும் குடிநீர் நிறுத்தப்படுகிறது.
இதனால் மீதமுள்ள தேவைக்கு 24 ஆயிரம் லிட்டர் டேங்க் கொண்ட லாரிகளில் தினசரி தேவைக்கு ஏற்ப 5 முதல் 6 தடவை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தப் படுகிறது.
இதற்காக ஒரு மாதத்திற்கு ரூ.5 லட்சம் வரை கல்லுாரி நிர்வாகம் செலவழிக்கிறது. இதற்கிடையில் அடுத்தாண்டு முதல் 24 முதுநிலை மருத்துவப்படிப்புகள் துவங்கப்படவுள்ளது. மேலும் தீவிர சிகிச்சை பிரிவு ஒன்றும் கல்லுாரி அருகே செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
மருத்துவக்கல்லுரியில் தண்ணீர் பற்றாக்குறை பல ஆண்டுகளாக தீராத பிரச்னையாக இருந்து வரும் நிலையில் முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கான விடுதிகள் கட்டப்பட்டால் அதற்கு தேவையான தண்ணீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தும் நிலையே நீடிக்கும்.
இதனால் கல்லுாரி நிர்வாகம் தண்ணீருக்காக மாதந்தோறும் பெரும் தொகையை செலவழிக்க வேண்டிய நிலை வரும். இப்பிரச்னையால் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்படாமல், வளாகத்தில் உள்ள மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை உருவாகியுள்ளது.
எனவே மருத்துவக்கல்லுாரிக்கு தனியாக கூட்டுக்குடிநீர் திட்டத்தில் குழாய்கள் அமைத்து தினசரி தேவையான குடிநீர் தடையின்றி கிடைத்திட  மாவட்ட இரு அமைச்சர்களும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.