ADDED : ஜூலை 02, 2025 07:58 AM
நரிக்குடி; பெண் தற்கொலையில் மர்மம் இருப்பதாக கொடுத்த புகாரில் மாமியார் ராமாயியை போலீசார் கைது செய்தனர். கணவர் முத்துப்பாண்டியை 27, தேடி வருகின்றனர்.
காரியாபட்டி ஆவியூரைச் சேர்ந்தவர் மணிகண்டன் 50. கோவையில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவரது மகள் யோக பிரதீபா 26, வை நரிக்குடி தச்சனேந்தலைச் சேர்ந்த முத்துப்பாண்டி 27,க்கு 2024 ஜன 21ல் திருமணம் செய்து கொடுத்தார். முன்னதாக 30 பவுன் நகை, சில்வர் பாத்திரங்கள், டூ வீலர் சீர்வரிசையாக தர சம்மதித்தார். திருமணத்தன்று 11 பவுன் நகை, 1 லட்சம் செலவில் பொருட்கள், டூவீலர் சீர்வரிசையாக கொடுக்கப்பட்டது.
முத்துப்பாண்டி, இவரது தாய் ராமாயி வரதட்சணையாக கொடுக்க வேண்டிய 19 பவன் நகையை வாங்கி வர வேண்டுமென யோகபிரதீபாவை கொடுமைப்படுத்தினார். மார்ச் 2 ல் விஷம் குடித்து யோக பிரதீபா தற்கொலை செய்தார். அவரது தந்தை புகாரில் அ.முக்குளம் போலீசார் கணவர் முத்துப்பாண்டி, மாமியார் ராமாயி, இவரது உறவினர்கள் முருகன், பேச்சி, சதீஷ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, மாமியார் ராமாயியை நேற்று கைது செய்த போலீசார், முத்துப்பாண்டியை தேடி வருகின்றனர்.