ADDED : செப் 14, 2025 03:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரியாபட்டி: காரியாபட்டி தோணுகால் கிராமத்தில் இம்மானுவேலுக்கு சொந்தமான செங்கல் சேம்பர் உள்ளது. இங்கு மிஷின் மூலம் செங்கல் உற்பத்தி செய்யும் பணி நடந்து வருகிறது.
நேற்று மதியம் அதே ஊரைச் சேர்ந்த சரவணன் மனைவி இருளாயி 45, மிஷினில் மண் அள்ளி போடும் பெல்ட்டில் சேலை சிக்கி இழுத்துச் சென்று மிஷினில் விழுந்தில் உடல் நசுங்கி பலியானார். மல்லாங்கிணர் போலீசார் விசாரிக்கின்றனர்.