/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கூமாபட்டி பஸ் ஸ்டாண்ட்டில் மூடிக்கிடக்கும் பாலுாட்டும் அறை : பெண்கள் அவதி

ADDED : டிச 01, 2025 06:29 AM
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே கூமாபட்டி பஸ் ஸ்டாண்டில் உள்ள தாய்மார் பாலுாட்டும் அறை செயல்பாட்டிற்கு வராமல் உள்ளதால் பெண்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அதனை உடனடியாக செயல்பாட்டு கொண்டு வர வேண்டுமென எதிர்பார்க்கின்றனர்.
எஸ்.கொடிக்குளம் பேரூராட்சியை சுற்றி ராமசாமியாபுரம், நெடுங்குளம், கான்சாபுரம், அத்தி கோயில், கிழவன் கோயில், பட்டுப்பூச்சி உட்பட பல்வேறு பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் கூமாபட்டி பஸ் ஸ்டாண்டுக்கு வந்து வெளியூர் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் கொடிக்குளம் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் கூமாபட்டி பஸ் ஸ்டாண்டில் தாய்மார்கள் பாலூட்டும் அறை நிறுவப்பட்டு பல மாதங்கள் ஆகியும் இன்னும் செயல்பாட்டுக்கு வராமல் மூடியே கிடக்கிறது. இதனால் கைக்குழந்தையுடன் வரும் தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலூட்ட சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
எனவே, இதனை தவிர்க்க காலதாமதமின்றி பாலுாட்டும் அறையை செயல்பாட்டுக்கு கொண்டுவர பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.