ADDED : மார் 09, 2026 07:16 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: கிருஷ்ணன்கோவில் வி.பி.எம்.எம். கல்வி நிறுவனத்தில் மகளிர் தின விழா நடந்தது. சேர்மன் சங்கர் தலைமை வகித்தார். தாளாளர் பழனிச்செல்வி, துணை தலைவர் தங்க பிரபு முன்னிலை வகித்தனர்.
தமிழ்த்துறை பேராசிரியை சங்கரம்மாள் வரவேற்றார். விருதுநகர் மாவட்ட அரசு மாதிரி பள்ளி, கல்லுாரி மாணவிகள் குழுவினர் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. கல்லுாரி முதல்வர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். ஆசிரியை பிரவினா நன்றிக் கூறினார்.
* அருப்புக்கோட்டையில் மகளிர் தினத்தை முன்னிட்டு, அ.தி.மு.க., மகளிர் அணி சார்பில் இணைச் செயலாளர் சித்ரா ஜெய்சங்கர் கேக் வெட்டினார். பெண்களுக்கு இலவச சேலைகள் வழங்கினார். கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், நகரச் செயலாளர் சோலை சேதுபதி, நிர்வாகிகள் வாழ்த்தினர். மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் கலைச்செல்வி, ஒன்றிய மகளிர் அணி துணைத் தலைவர் சித்தாயம்மாள், நகர மகளிர் அணி இணை செயலாளர் சரோஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
