ADDED : ஜூன் 15, 2025 06:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை பாலையம்பட்டி ஊராட்சியைச் சேர்ந்த புறநகர் பகுதிகளை சேர்ந்த பெண்கள் 100 நாள் வேலை கேட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
பாலையம்பட்டி ஊராட்சிக்கு சேர்ந்த புறநகர் பகுதிகளான வேல்முருகன் காலனி, தீர்த்தக்கரை, புளியம்பட்டி காலனி, இ.பி., காலனி, காமராஜ் நகர், பசும்பொன் நகர், இந்திரா நகர், திருக்குமரன் நகர், ராஜிவ் நகர், போஸ்டல் காலனி உள்ளிட்ட விரிவாக்க பகுதியில் உள்ள பெண்களுக்கு 100 நாள் வேலை பணி வழங்க கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதற்கு காவிரி, குண்டாறு, வைகை பாசன விவசாயிகள் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் ராம்பாண்டியன் தலைமை வகித்தார். சமூக ஆர்வலர் ராஜாராம், மாவட்டத் துணைச் செயலாளர் கோபாலகிருஷ்ணன், கட்டுமான தொழிலாளர் சங்க தலைவர் சித்தார்த்தன் ஆகியோர் பேசினர்.