ADDED : டிச 27, 2024 04:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: சிவகாசி எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரி, மாவட்ட நிர்வாகம்,மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம் சார்பில் சுய உதவிக் குழு மகளிருக்கான இயற்கையோடு இயைந்த பயன்பாட்டு பொருட்கள் தயாரிப்பு குறித்த பயிற்சி பட்டறை நடந்தது.
கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்தார். கல்லுாரி தலைவர் திலகவதி, செயலர் அருணா முன்னிலை வகித்தனர். கல்லுாரி முதல்வர் சுதா பெரியதாய் தலைமையுரை வழங்கினார். ஆலோசகர் விஜயபிரியா வரவேற்றார்.
மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் நாச்சியார் அம்மாள் பேசினார். கல்லுாரி உதவிப் பேராசிரியர்கள் கார்த்திகா உட்பட பலர் பயிற்சி அளித்தனர். சுய உதவி குழு மகளிர், கல்லுாரி மாணவிகள் பயிற்சி பெற்றனர்.