/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவகாசி ரயில்வே மேம்பாலத்தில் தார் ரோடு போடும் பணி துவக்கம்
/
சிவகாசி ரயில்வே மேம்பாலத்தில் தார் ரோடு போடும் பணி துவக்கம்
சிவகாசி ரயில்வே மேம்பாலத்தில் தார் ரோடு போடும் பணி துவக்கம்
சிவகாசி ரயில்வே மேம்பாலத்தில் தார் ரோடு போடும் பணி துவக்கம்
ADDED : அக் 26, 2025 06:45 AM

சிவகாசி: சிவகாசியில் கட்டப்பட்டு வரும் ரயில்வே மேம்பாலத்தில் தார் ரோடு அமைக்கும் பணி துவங்கியுள்ள நிலையில் திட்டமிட்டபடி நவ. இறுதியில் பாலம் பயன்பாட்டிற்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிவகாசி - ஸ்ரீவில்லிபுத்துார் ரோட்டில் சாட்சியாபுரம் ரயில்வே கிராசிங்கில் மேம்பாலம் அமைக்கும் பணி ரூ.61.74 கோடியில் 2024 ஜூலையில் அடிக்கல் நாட்டப்பட்டது. ரயில்வே தண்டவாளத்திற்கு கிழக்கு பக்கம் 11 துாண்கள், மேற்கு பக்கம் 6 துாண்கள் என மொத்தம் 17 துாண்கள் அமைக்கப்பட்டு மேம்பாலம் கட்டுமான பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்து உள்ளது. பெரியகுளம் கண்மாய் கரையில் மேம்பாலம் ஏறும் இடத்தில் நான்கு ரோடு சந்திக்கும் இடத்தில் ரவுண்டானா அமைக்கும் பணி நடந்த நிலையில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மேலும் பாலத்தில் பெயிண்டிங் வேலை நடந்து வருகிறது. தற்போது பாலத்தில் தார் ரோடு அமைக்கும் பணி துவங்கியுள்ளது. இப்பணிகள் விரைவில் முடிவடைய உள்ளது. தொடர்ந்து மின் விளக்குகள் பொருத்தும் பணி துவங்க உள்ளது.
இதுகுறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறுகையில்: சாட்சியாபுரம் ரயில்வே மேம்பால பணிக்கான திட்ட காலம் பிப்., வரை உள்ள நிலையில், அனைத்து துறைகளின் ஒத்துழைப்பு காரணமாக தற்போது 95 சதவீதம் பணிகள் முடிந்துள்ளது. ரவுண்டானா அமைக்கும் பணிகள் இம்மாத இறுதிக்குள் நிறைவடையும். பாலத்தில் தார் ரோடு அமைக்கும் பணி துவங்கியுள்ள நிலையில் நவ. இறுதியில் பாலம் பயன்பாட்டுக்கு வரும், என்றனர்.

