/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரூ.20.44 கோடியில் கவுசிகா நதியை புனரமைக்கும் பணிகள் துவக்கம்
/
ரூ.20.44 கோடியில் கவுசிகா நதியை புனரமைக்கும் பணிகள் துவக்கம்
ரூ.20.44 கோடியில் கவுசிகா நதியை புனரமைக்கும் பணிகள் துவக்கம்
ரூ.20.44 கோடியில் கவுசிகா நதியை புனரமைக்கும் பணிகள் துவக்கம்
ADDED : ஆக 06, 2025 09:05 AM
விருதுநகர் : விருதுநகரில் கவுசிகா நதியை ரூ.20.44 கோடியில் புனரமைத்து, நவீனமயமாக்கல் பணி, வரத்து கால்வாய்களை தூர்வாரும் பணிகளை அமைச்சர் தங்கம் தென்னரசு துவங்கி வைத்தார். கலெக்டர் சுகபுத்ரா தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., சீனிவாசன் முன்னிலை வகித்தார்.
கவுசிகா நதியில் 11.50 கி.மீ., வரையிலான நீளம் வரை துார்வாரி சீரமைக்கப்பட உள்ளது. தடுப்பணை, குறுக்கு கட்டுமான பணிகளை புனரமைத்து தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகளும், நகரத்தில் இருந்து வரக்கூடிய கழிவுநீர் எங்கெல்லாம் கலக்கிறதோ அந்த இடங்களை கண்டறிந்து, 1.60 கி.மீ. நீளத்திற்கு குழாய்கள் அமைத்து, நதியில் கலக்காமல் அதனை மீண்டும் மறுசுழற்சி செய்து, சுத்திகரிக்கும் பணிகளும் செய்யப்பட உள்ளன. இதன் மூலம் 2891 ஏக்கர் நிலப்பரப்பு பயன் பெறுகிறது.
வைப்பாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் மலர்விழி, நகராட்சி கமிஷனர் சுகந்தி, நகராட்சி தலைவர் மாதவன் பங்கேற்றனர்.