/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மந்தகதியில் தாமிரபரணி கூட்டுகுடிநீர் திட்ட பணிகள்
/
மந்தகதியில் தாமிரபரணி கூட்டுகுடிநீர் திட்ட பணிகள்
மந்தகதியில் தாமிரபரணி கூட்டுகுடிநீர் திட்ட பணிகள்
மந்தகதியில் தாமிரபரணி கூட்டுகுடிநீர் திட்ட பணிகள்
ADDED : நவ 28, 2025 07:58 AM
சிவகாசி: சிவகாசி மாநகராட்சியில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட பணிகள் துவங்கி 2 ஆண்டுகளுக்கு மேலாகியும், 25 சதவீதம் இணைப்புகள் மட்டுமே மாநகராட்சி வசம் ஒப் படைக்கப்பட்டுள்ளதால், பழைய இணைப்பில் குடிநீர் வினியோகம் செய்வதால் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
சிவகாசி மாநகராட்சி யில் மானுார் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் தினசரி 34 லட்சம் லிட் டரும், வெம்பக்கோட்டை அணை மூலம் 21 லட்சம் லிட்டரும், உள்ளூர் நீர் ஆதாரங்கள் மூலம் 28 லட்சம் லிட்டர் என நாள் ஒன்றுக்கு 80 லட்சம் லிட்டருக்கு மேல் குடிநீர் கிடைக்கிறது.
இதன்மூலம் மாநக ராட்சியில் உள்ள 39 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிநீர் இணைப்புகளுக்கு ஒரு நபருக்கு நாள் ஒன்றுக்கு 60 லிட்டர் வீதம் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.
சிவகாசி மாநகராட்சி யின் எதிர்கால குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் 2018ல் ரூ.170 கோடியில் தாமிர ப ரணி கூட்டு குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டது.
இதற்காக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் இருந்து 54 கிலோ மீட்டர் தொலைவுக்கு குழாய் பதிக்கப்பட்டு, வெம்பகோட்டையில் நீரேற்று நிலையமும், சிவகாசி மாநகராட்சியில் 19 மேல்நிலை குடிநீர் தொட்டிகளும் அமைக்கப்பட்டது.
சிவகாசி மாநகராட்சி 25 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு 370 தெருக்களில் 191 கிலோ மீட்டர் தொலைவுக்கு குழாய்கள் பதிக்கப்பட்டு, 38,630 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு, வீடுகளுக்கு முன் மீட்டர் பொருத்தப்பட்டது.
தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தில் குடிநீர் வினியோகத்தை 2023 மே மாதம் சங்கரன்கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் நேரு, சாத்துார் ராமச் சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இத்திட்டத்தின் கீழ் தற்போது சிவகாசி மாநகராட்சிக்கு தினசரி 80 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கப் பட்டு வரும் நிலையில், சோதனை ஓட்டம் முடிந்து 25 மண்டலங் களில் 6 மண்டலங்கள் மாநகராட்சி வசம் ஒப் படைக்கப்பட்டு விட்டது. மீதமுள்ள பகுதிகள் மாநகராட்சி வசம் ஒப் படைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த 6 மண்டலங்களில் 3 மண்டலங்களில் மட்டுமே தாமிரபரணி கூட்டு குடிநீர் இணைப்பு மூலம் குடிநீர் வினி யோகம் செய்யப்படுகிறது. பிற பகுதிகளில் பழைய இணைப்பு மூலமே குடிநீர் வினியோகம் நடக்கிறது.
அனைத்து வீடு களுக்கும் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்ட இணைப்பு வழங்கப்பட்ட பின்னரும், பழைய இணைப்புகள் மூல மாகவே குடிநீர் வினியோகம் செய்யப் படுவதால் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற் படுகிறது.
கூட்டு குடிநீர் திட்டத்தை முழுமையாக செயல்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

