/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிறுமிக்கு பாலியல் தொல்லை; தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை
/
சிறுமிக்கு பாலியல் தொல்லை; தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை
சிறுமிக்கு பாலியல் தொல்லை; தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை
சிறுமிக்கு பாலியல் தொல்லை; தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை
ADDED : ஜன 04, 2026 06:42 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம் சாத்துார் அப்பயநாயக்கன்பட்டி வீர மணிகண்டன் 30. பட்டாசு ஆலை தொழிலாளி. இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். 2020ல் இவரது அலைபேசிக்கு தவறுதலாக வந்த அழைப்பில் பேசிய சிவகாசியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவருடன் பேசி பழகி உள்ளார்.
தனக்கு திருமணம் ஆனதை மறைத்து, அந்த சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கோவை அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
கோவையில் சரியான வேலை கிடைக்காததால், தன்னை தனது தாய் வீட்டில் விட்டு விடுமாறு கூறியதால், சிறுமியை அழைத்து வந்த வீரமணிகண்டன், திருத்தங்கல் பஸ் ஸ்டாப்பில் இறக்கி விட்டு சென்றுவிட்டார்.
திருத்தங்கல் போலீசார் வீர மணிகண்டனை, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். ஸ்ரீவில்லிபுத்துார் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது.
வீரமணிகண்டனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க கலெக்டருக்கு பரிந்துரை செய்தும் நீதிபதி புஷ்பராணி தீர்ப்பளித்தார்.

