ADDED : அக் 11, 2024 03:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை:விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே குறிஞ்சாக்குளத்தை சேர்ந்தவர் வானமாலை, 44. கட்டட தொழிலாளி.
இவர் நேற்று காலை மணி நகரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சென்ட்ரிங் போடும் பணிக்காக சென்றபோது அருகில் இருந்த மின்சார ஒயர் பட்டு மின்சாரம் தாக்கி துாக்கி வீசப்பட்டார். அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர். - -