நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம் சத்திரப்பட்டி அடுத்த கலங்காபேரி புதுாரை சேர்ந்தவர் திவான் தன்வீர் நிஸாத் 22, வெல்டிங் தொழிலாளி.
எஸ்.ராமலிங்காபுரம் முதுகுடி ரோட்டில் பாலிதீன் கம்பெனியில் சக தொழிலாளர்களுடன் 30 அடி உயரம் உள்ள கூரையில் தார் சீட் ஒட்டுவதற்காக பணியில் இருந்த போது தடுமாறி கீழே விழுந்துள்ளார்.
திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

