ADDED : பிப் 23, 2024 05:32 AM

சிவகாசி: வெம்பக்கோட்டை பஸ் ஸ்டாப்பில் மாவட்ட பட்டாசு தீப்பெட்டி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ராமுதேவன்பட்டி பட்டாசு ஆலை வெடி விபத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் கூட்டம், ஆர்ப்பாட்டம் நடந்தது.
தொடர்ந்து நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் தேவா, பொதுச் செயலாளர் பாண்டியன் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட தலைவர் மகாலட்சுமி பேசினார். பட்டாசு ஆலைகளில் விதிமுறை மீறல் காரணமாக ஏற்பட்டு வரும் தொடர் விபத்துகளை தடுக்க தவறிய அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இறந்தவர்களின் குடும்பத்திற்கு பட்டாசு ஆலை நிர்வாகம் சார்பில் தலா ரூ. 10 லட்சம் வழங்க வேண்டும் அச்சங்குளம் மாரியம்மாள் பட்டாசு ஆலை விபத்து விவகாரத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய உத்தரவின்படி அரசு, பலியானவர்கள் குடும்பத்திற்கு ரூ. 20 லட்சம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.