ADDED : மே 23, 2025 12:07 AM

சிவகாசி: சிவகாசி எஸ்.எப்.ஆர்.,மகளிர் கல்லுாரியில் அகத்தர உறுதிப்பாட்டு மையம் சார்பில் பிற கல்லுாரிகளைச் சேர்ந்த மாணவிகளுக்கான பணியிடை செயல்முறை பயிற்சி மே 21 முதல் ஜூன் 10 வரை நடக்கிறது.
இப்பயிற்சியின் துவக்க விழா கல்லுாரி தலைவர் திலகவதி, செயலர் அருணா தலைமையில் நடந்தது. அகத்தர உறுதிப்பாட்டு மையம் ஒருங்கிணைப்பாளர் தேவி ஆரோக்கிய வனிதா வரவேற்றார். கல்லுாரி முதல்வர் சுதா பெரியதாய் பேசினார். மாணவிகளின் செயல் திறனும் ஆற்றலும் வளர்க்கப்படும் விதத்திலும், தொழில் திறன் மிக்கவர்களாக உருவாக்கும் விதத்திலும் பயிற்சி நடந்தது.
இதில் 9 துறைகளில் இருந்து 9 பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. 20 கல்லுாரிகளைச் சேர்ந்த 337 மாணவிகளும், திருச்சி பாரதிதாசன் பல்கலையிலிருந்து ஆறு மாணவிகளும் பங்கேற்றனர். அகத்தர உறுதிப்பாட்டு மையம் துணை ஒருங்கிணைப்பாளர் சிவப்பிரியா நன்றி கூறினார் ஏற்பாடுகளை அகத் தர உறுதிப்பாட்டு மையம் உறுப்பினர்கள் செய்தனர்.