ADDED : ஜூன் 10, 2026 05:13 AM

அ நிறம் | அளவு
சிவகாசி: சிவகாசி எஸ்.என்.எம். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு 10, பிளஸ் டூ வகுப்பு மாணவர்களுக்கு சுவரொட்டி விளக்கக் காட்சி, ஓவிய போட்டிகள் நடந்தது.
பள்ளி தலைவர் சுப்பாராஜு தலைமை வகித்து பேசினார்.
முதல்வர் செல்வி முன்னிலை வகித்தார். மரக்கன்றுகள் நடப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சுற்றுச்சூழல் குழு ஒருங்கிணைப்பாளர்கள் செந்தில் முருகன், உஷா மகேஸ்வரி செய்தனர்.
