ADDED : ஜன 17, 2026 06:04 AM

அ நிறம் | அளவு
சிவகாசி: சிவகாசி சட்டசபை தொகுதியில் கேடிஆர் பவுண்டேஷன் மற்றும் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் பொங்கல், முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர் ., ஜெ., பிறந்த நாளை முன்னிட்டு முப்பெரும் விழாவாக வளரும் தமிழகம் வெல்லும் பாரதம் என்ற தலைப்பில் கோலப் போட்டி நடந்தது.
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி துவக்கி வைத்தார். இந்தக் கோல போட்டியில் ஒரே நேரத்தில் 27 ஆயிரத்து 599 பேர் பங்கேற்று கோலமிட்டனர். இந் நிகழ்ச்சி அமெரிக்காவைச் சேர்ந்த கோல்டன் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் நிறுவனத்தால் உலக சாதனையாக அங் கீகரிக்கப்பட்டது.
இந்நிறுவனத்தின் சிஇஓ மணீஷ் விஷ்னோய் ஆய்வு செய்து இந்த சாதனைக்கான சான் றிதழை ராஜேந்திர பாலாஜியிடம் வழங்கினார். கோலப்பாட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
