ADDED : டிச 26, 2025 05:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர், விருதுநகர் சாரதா சக்தி மெட்ரிக் பள்ளியில், நடேசர் நாட்டியாலயாவின் 21ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, பாரதியாருக்கு மரியாதை செலுத்தும் வகையில், 147 மாணவிகள் 33 நிமிடம் இடைவிடாது பரதநாட்டியமாடி உலக சாதனை புரிந்தனர்.
விழாவிற்கு அம்பாள் குழுமம் சேர்மன் முத்துமணி தலைமை வகித்தார். பேராசிரியர் வினோத், தாளாளர் வசந்தி, முதல்வர் அந்தர் சொர்னேஸ்வரன் பங்கேற்றனர்.
இந்நிகழ்வை டிவைன் வேர்ல்டு புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' நிறுவனம் உலக சாதனையாகப் பதிவு செய்தது. மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன. நாட்டியாலயா நிறுவனர் அகிலா நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை நிர்வாகிகள் கிருஷ்ணவேணி, பாரதி, மேகலா, சிவக்குமார் செய்திருந்தனர்.

