ADDED : ஜன 28, 2026 05:49 AM
அ நிறம் | அளவு
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துாரில் தமிழ் இலக்கிய பெருமன்றத்தின் சார்பில் 271 எழுத்தாளர் சந்திப்பு கூட்டம் நடந்தது. தலைவர் கோதையூர் மணியன் தலைமை வகித்தார். கந்தசாமி இசை பாடல் பாடினார். வரலட்சுமி வரவேற்றார்.
எழுத்தாளர் சவுந்தரராஜனின் படைப்புகளை விமர்சித்து எழுத்தாளர்கள் மணிமேகலை, ரமேஷ், சிவனேசன், காளியப்பன், மங்கையச்செல்வன் பேசினர். எழுத்தாளர் சவுந்தரராஜன் ஏற்புரையாற்றினார். மாரியப்பன் நன்றி கூறினார்.
